பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் கடந்த 14ஆம் தேதி தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுஷாந்த் சிங்கின் நண்பரை விசாரித்த காவல்துறையினர்! - Latest cinema news
சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து அவரது கிரியேட்டிவ் இயக்குநரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
சுஷாந்த் சிங்
இதற்கிடையில் இவரது தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அவரது நெருங்கிய நண்பர்கள் உட்பட குடும்பத்தாரை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சுஷாந்தின் கிரியேட்டிவ் இயக்குநரை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று காவல்துறையினர் 13 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.