அறிமுக இயக்குனர் ஜே.ஜே. பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள்.
சூர்யா தயாரித்திருந்த இத்திரைப்படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ‘பொன்மகள் வந்தாள்’ பட வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக்கு, நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா விலை உயர்ந்த பொருள்களை பரிசாக வழங்கியுள்ளனர்.
அப்போது எடுக்கப்ட்ட புகைப்படங்களை பெட்ரிக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "ஜோதிகாவும், சூர்யாவும் மறக்க முடியாத பரிசு பொருள்களை கொடுத்துள்ளனர். அதற்கு மிக்க நன்றி.
நீங்கள் கொடுத்ததை விட, உங்களை அறிந்து கொண்டது தான் எனக்கு கிடைத்த மிக சிறந்த பரிசு. உங்களது அளவு கடந்த அன்பால் தான் பொன்மகள் வந்தாள் படம் வெற்றியடைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :ஜெயில் படத்தில் தனுஷ் பாடிய பாடல் வெளியீடு!