ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரைப் போன்று, மகளிருக்கான டி20 சேலஞ்ச் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ், மித்தாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
மகளிர் டி20 சேலஞ்ச்: சூப்பர் நோவாஸ் 142 ரன்கள் குவிப்பு! - வெலாசிட்டி
வெலாசிட்டி அணிக்கு எதிரான இன்றைய மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர் நோவாஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை எடுத்துள்ளது.

மகளிர் டி20 சேலஞ்ச்: சூப்பர் நோவாஸ் 142 ரன்கள் குவிப்பு
இதில், டாஸ் வென்ற வெலாசிட்டி அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த சூப்பர் நோவாஸ் அணி ஜெமியா ரோட்ரிகஸின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 142 ரன்களை எடுத்தது. ஜெமியா 48 பந்துகளில் 77 ரன்கள் (10 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெலாசிட்டி அணி தரப்பில் அமெலியா கேர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.