சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரோனா பரவலை தடுக்கும் பணிகளில் முன்னணியில் இருந்து இரவு- பகலாக பணியாற்றும் காவல் துறையினருக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. கரோனா பாதிப்புக்குள்ளாகும் காவல்துறை மற்றும் சிறைத் துறையினரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
கடந்த மே மாதம் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட 19 கைதிகளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே புழல் சிறையில் கரோனா தொற்று தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் இதுநாள் வரை அங்குள்ள சிறை கைதிகளுக்கு சோதனைகளும் நடத்தப்படவில்லை. தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை” என கூறியிருந்தார்.