தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மதுரையில் கரோனா நோய்த்தொற்றுக்கு எஸ்எஸ்ஐ உயிரிழப்பு - Corona Affected Police Dead

மதுரை: உசிலம்பட்டி அருகே கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிறப்பு காவல் ஆய்வாளர்(எஸ்எஸ்ஐ) உயிரிழந்தார்.

Corona Affected Cekkurani Police Dead
Corona Affected Cekkurani Police Dead

By

Published : Jul 20, 2020, 6:02 PM IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராகப் (எஸ்எஸ்ஐ) பணியாற்றி வந்த கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி.

கடந்த ஜூன் 20 ஆம் தேதி, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அங்குள்ள காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், ஒரு எஸ்.ஐ. மூன்று காவலர்கள் என, நான்கு பேருக்கு கடந்த ஜூன் 27 ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதில் எஸ்.எஸ்.ஐ. பாண்டி சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 20) காலை பரிதாபமாக உயிரிழந்தார். காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், கடந்த 1989ஆம் ஆண்டு காவலராகப் பணியில் சேர்ந்தவர்.

இவருக்கு வசந்தி என்ற மனைவி மற்றும் ஒரு பெண், இரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இதையும் படிங்க:நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details