கிருஷ்ணகிரி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இம்மாவட்டத்திலுள்ள காதுகேளாதோர், வாய்ப் பேசாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான சிறப்புத்தேர்வு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இம்மாவட்டத்தைச் சார்ந்த மொத்தம் 9 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக சென்னை மையத்திற்குப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிறப்புத்தேர்வு எழுதுவதற்காக சென்னை தேர்வு மையத்திற்கு புறப்பட்ட மாணவர்கள்! - 10th and 12 exams
கிருஷ்ணகிரி: 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு சிறப்புத்தேர்வு எழுதுவதற்காக சென்னை தேர்வு மையத்திற்கு மாணவர்கள் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
10, 11ஆம் வகுப்பு சிறப்பு தேர்வு எழுதுவதற்காக சென்னை தேர்வு மையத்திற்கு புறப்பட்ட மாணவர்கள்
இவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் இனிப்புகளை வழங்கி, தேர்வுகளை நல்ல முறையில் எழுதி, வெற்றி பெறச்சொல்லி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
இந்தப் பேருந்தில் திருப்பத்தூர், வேலூர், சேலம், தருமபுரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.