கரோனா தீவிரமாகும்போது பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்தக்கூடாது. பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்துசெய்து பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
திருச்சி: பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம் நடத்திய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:58:22:1594798102-tn-tri-02-students-protest-script-photo-7202533-15072020125619-1507f-1594797979-21.jpg)
Students make protest in trichy
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் , மாணவர்கள், பெற்றோர் இதில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தகுந்த இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்து கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.