தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்! - பொறியியல் கல்லூரி

சென்னை: இளங்கலை பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரே நாளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்!
பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்!

By

Published : Jul 16, 2020, 6:17 PM IST

இளங்கலை பொறியியல் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று(ஜூலை 15) மாலை 6 மணி முதல் இன்று மதியம் 3 மணி வரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில், பிஇபிடெக் ஆகிய இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நேற்று மாலை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்தார்.

இதற்கான, ஆன்லைன் விண்ணப்பிக்கும் வசதியினை உயர்கல்வித்துறை அமைச்சர் நேற்று ( ஜூலை 15 ) தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்துவருகின்றனர்.

இவர்களில் 9 ஆயிரத்து 546 பேர் பதிவுக் கட்டணத்தையும் செலுத்தி உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று(ஜூலை 16) வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதும் அதிகரித்துவருகிறது.

பொறியியல் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் 21ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்கள் மூலம் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை சரிபார்க்கப்படும்.

இதனைதொடர்ந்து, மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாணவர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 52 இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அங்குச் சென்றும் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தங்கள் விபரங்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details