புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் வருவாய்த் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால், இந்தாண்டு உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது சாதி, வருவாய், குடியிருப்பு உள்ளிட்ட எந்தவித புதிய சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய தேவையில்லை என்றும், கடந்த காலங்களில் பெற்ற பழைய சான்றிதழ்களை வைத்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
சான்றிதழ் கேட்டு வருவாய்த் துறை அலுவலகத்தின் முன்பு திரண்ட மாணவர்கள்
புதுச்சேரி: கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க சான்றிதழ் கேட்டு வட்டார வருவாய்த் துறை அலுவலகத்தில் மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், காரைக்கால் வட்டார வருவாய்த் துறை அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் புதிய சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு மாணவர்களுக்கு அறிவுத்தினர்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வட்டார வருவாய்த் துறை அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அலுவலகம் மூடப்பட்டது. இச்சூழலில் அலுவலகம் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது.