திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் அளித்த மனு அளித்தனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - Students federation of India protest
திருவண்ணாமலை: இந்திய மாணவர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து செய்யும் முடிவை திரும்ப பெற வேண்டும், ஊரடங்கு பிரச்னை முடிவதற்குள் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அநியாய கல்வி கட்டணங்களை தடுத்து நிறுத்த வேண்டும், இணையதள வசதி மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கப்பெற்ற பிறகே, இணைய வழியில் பாடம் நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்,
பள்ளிகள் திறப்பது மற்றும் கற்றல், கற்பித்தல் குறித்தான தமிழ்நாடு அரசின் ஆய்வுக்குழுவில் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர் அமைப்பு பிரதிநிதிகளை இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் முன்பு திரண்ட இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.