தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

காரிமங்கலத்தில் கிணற்றில் குளித்த மாணவன் உயிரிழப்பு! - கிணற்றில் குளித்த மாணவன் உயிரிழப்பு

தருமபுரி:காரிமங்கலம் அருகே கிணற்றில் குளித்த பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Student dies after bathing in well in Karimangalam
Student dies after bathing in well in Karimangalam

By

Published : Aug 19, 2020, 10:49 PM IST

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அடிலம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகன் கௌதம். இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று விவசாய கிணற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, கௌதம் நீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து ஊர் பொதுமக்கள் பாலக்கோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்து கௌதமின் உடலை சடலமாக மீட்டு உடற்கூறாய்விற்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவன் கிணற்றில் குளிக்கச் சென்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ABOUT THE AUTHOR

...view details