தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை!

நாமக்கல்: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிபாளர் சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Namakkal SP Sakthi Ganeshan
Namakkal SP Sakthi Ganeshan

By

Published : Sep 20, 2020, 4:24 AM IST

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் மீதும் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மீதும் பல்வேறு பந்தயங்கள் இணைய வழியாகவும், உள்ளூர்களில் தரகர்களை கொண்டும் பல்வேறு மோசடிகள் நாடு முழுவதும் நடக்க வாய்ப்புள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் இதுபோன்ற சூதாட்ட பந்தயங்களில் கலந்துகொண்டு ஏமாற வேண்டாம்.

சூதாட்டம் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனடியாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், இதுபோன்ற சூதாட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details