பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடன் சேர்ந்து காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் சதி செய்வதாகவும், ஆனால் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சியமைப்பார் என தெரிவித்திருந்தார். மேலும் பாகிஸ்தானின் சதிகள் அனைத்தும் முறியடிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதற்கு பாகிஸ்தான் பிரதமர் இந்திய தேர்தலில் பாகிஸ்தான் ஆலோசனை தேவை என்றால், அதை வழங்க தாங்கள் தயாராகவுள்ளோம் என தெரிவித்திருந்தார்.
உங்களது ஆலோசனை தேவையில்லை-பாக். பிரதமருக்கு பாஜக பொதுச்செயலாளர் பதில் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்
டெல்லி: இந்திய தேர்தல்களில் தலையீட வேண்டாம் எனவும், தங்களது ஆலோசனை தேவையில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பாஜக பொதுச்செயலாளர் ராம் மதேவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் ராம் மதேவ் கூறியதாவது, இந்திய தேர்தல்கள் குறித்து பாகிஸ்தான் பிரதமராகிய உங்களது ஆலோசனை தேவையில்லை. எங்களது நாட்டு பிரதமரை தேர்தெடுக்க மக்களுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது போல, இந்த முறையும் பாஜக வெற்றிப் பெற்று மோடி தலைமையிலான ஆட்சி தான் அமையும் என்றும், அப்போது காஷ்மீர் பாதுகாப்பு பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.