தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஊழல் குறித்து பாடம் எடுத்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் - காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கம்

ரேபரேலி: உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் ஒரு காவல் ஆய்வாளர் ஒருவர் தனது துணை அலுவலர்களுக்கு ஊழல் குறித்த பாடம் எடுத்ததாக சமூகவலைதளங்களில் ஆடியோவெளியானதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஊழல் குறித்து பாடம் எடுத்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
ஊழல் குறித்து பாடம் எடுத்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

By

Published : Jun 18, 2020, 7:45 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள கீரோ காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் மணிசங்கர் திவாரி. சமூக வலைதளத்தில் இவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3.59 நிமிட ஆடியோ கிளிப்பில், மணிசங்கர் திவாரி ஒரு எம்.எல்.ஏ மற்றும் முந்தைய அரசாங்கத்தில் ஒரு அமைச்சருடனான அவருக்கு இருந்த தொடர்பு காரணமாக அவரால் எவ்வாறு ஒரு போலீஸ் காவல் நிலையத்தை இயக்க முடிந்தது என்று துணை அலுவலர்களிடம் கூறுகிறார்.

அதே ஆடியோவில், திவாரி ஜூனியர்களிடம், உங்கள் வேலை குற்றம் செய்வதென்றால், பொறுப்பாளரின் வேலை அதை சமாளிப்பது என்று கூறுகிறார்.

கோட்வாலி காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது, அவர் ஏராளமக பணம் சம்பாதித்தார் என்பதையும் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சருடன் இருந்த நல்லுறவு காரணமாக யாரும் என்னை அகற்ற முடியவில்லை என்றும் அவர் பெருமை பேசுகிறார்.

ஆடியோ வெளியான உடன் ரேபரேலி காவல் கண்காணிப்பாளர் ஸ்வப்னில் மம்கெய்ன் காவல் ஆய்வாளர் மணிசங்கர் திவாரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்தும், அவருக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்

ABOUT THE AUTHOR

...view details