தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கரோனா உறுதி - கரோனா தொற்று

தேனி: பெரியகுளம் அருகே இயங்கிவந்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பணிபுரிந்து வந்த கிளை அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கரோனா உறுதி
Corona issue

By

Published : Jun 27, 2020, 12:59 PM IST

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. அதிகப்படியாக, பெரியகுளம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக காய்ச்சல் அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டவருக்கு, நேற்றிரவு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, சிகிச்சைக்காக அவர் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, வங்கி மேலாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் பணிபுரிந்து வந்த கிளை அலுவலகம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது. முன்னதாக, தேவதானப்பட்டி பேரூராட்சி சுகாதாரத் துறையினர் வங்கி அலுவலகத்தை கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள், நெருங்கிய தொடர்பிலிருந்த வாடிக்கையாளர்களின் ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

ABOUT THE AUTHOR

...view details