தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம் - Started work on road reconstruction

கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தில் ரூ.19 லட்சம் செலவில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது.

சாலை சீரமைப்பு பணி
சாலை சீரமைப்பு பணி

By

Published : Jun 6, 2020, 12:50 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தில் கடற்கரை சாலையை சீரமைக்க தமிழ்நாடு அரசிடமும், சட்டமன்ற உறுப்பினரிடமும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சாலையை சீரமைக்க ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த சாலைப்பணி சீரமைக்கும் பணி இன்று(ஜூன் 5) தொடங்கியது.

இந்த சாலைப்பணியை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் எம்எல்ஏ ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆரோக்கியபுரம் பங்கு தந்தை அருட்பணி மதன், திமுக, அதிமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details