தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஸ்டார் புரூட் பழங்களுக்கு நல்ல விலை, விவசாயிகள் மகிழ்ச்சி‌! - ஸ்டார் புரூட் பழங்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் ஸ்டார் புரூட் பழங்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி‌ அடைந்துள்ளனர்.

ஸ்டார் புரூட் பழங்களுக்கு நல்ல விலை - விவசாயிகள் மகிழ்ச்சி‌.
ஸ்டார் புரூட் பழங்களுக்கு நல்ல விலை - விவசாயிகள் மகிழ்ச்சி‌.

By

Published : Jun 22, 2020, 11:14 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள பேத்துப்பாறை, வடகவுஞ்சி, அஞ்சிவீடு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் இருந்து வருகிறது.

பெரும்பாலும் இங்கு மலை பயிர்களான வாழை, அவரை, பலா, கேரட், உருளைக் கிழங்கு, காப்பி உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் முக்கிய விவசாய பயிர்களாக பயிரிட்டு வருகின்றனர்.

தற்போது பிளம்ஸ் சீசன் முடிவடைந்த நிலையில் மலைப்பகுதிகளில் ஸ்டார் புரூட் எனப்படும் விளிம்பி பழம் சீசன் துவங்கி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. பொதுவாக தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இந்த வகை பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

தற்போது கொடைக்கானலில் ஸ்டார் புரூட் பழங்கள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளன. இந்தப் பழங்கள், கிலோ 100 ரூபாய் முதல் 150 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்டார் புரூட் பழங்களுக்கு நல்ல விளைச்சலுடன், நல்ல விலையும் கிடைப்பதால் பழ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் லிச்சி பழ விவசாயிகள் கடும் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details