திருவள்ளூர்:சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பழமையான ஸ்ரீபொம்மி சமேத ஸ்ரீமுத்தீஸ்வரர் ஆலயத்தில் பல்வேறு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், மஹா பிரதோசம், தீபாராதனை நடந்தேறின. அதனைத்தொடர்ந்து மாலையில் அக்கோயில் வளாகத்தில் உள்ள பெரிய சிவலிங்கத்திற்கு கிரேன் மூலம் பால் அபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
திருவள்ளூரில் நடைபெற்ற பூஜை கரூர்:பசுபதி கல்யாண ஈஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் இரவு முழுவதும் விழித்திருந்து கூட்டுப் பிரார்த்தனை, சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டனர்.
மேலும், 108 முறை 'ஓம் நமச்சிவாய' என்ற வசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எழுதி, தங்களுடைய வேண்டுதல்களை பிரார்த்தனையின் மூலம் தெரிவித்தனர்.
இதையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பால் போன்றவை வழங்கப்பட்டன.
திருவள்ளூரில் நடைபெற்ற பூஜை இதையும் படிங்க:தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!