தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சொந்த ஊர் திரும்பும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள். - migrant labourers_home town

திருப்பூரில் இன்று 4 சிறப்பு ரயில்கள் மூலம் பிகார், அஸ்ஸாம் மற்றும் உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்கள் 6,400 பேர் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

திருப்பூரில் சொந்த ஊர் திரும்பும் 6,400 வெளிமாநில தொழிலாளர்கள்.
திருப்பூரில் சொந்த ஊர் திரும்பும் 6,400 வெளிமாநில தொழிலாளர்கள்.

By

Published : Jun 4, 2020, 3:08 PM IST

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் திருப்பூரில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 28 சிறப்பு ரயில்கள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் சொந்த ஊர் திரும்பும் 6,400 வெளிமாநில தொழிலாளர்கள்.

இதனிடையே இன்று பிகார், அஸ்ஸாம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் திருப்பூரிலிருந்து இயக்கப்படுகின்றன. இதில் 6,400 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கான உணவு தண்ணீர் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்ட பின்னர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details