திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக சாமுவேல் பாண்டியராஜன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் மார்ச் 9ஆம் தேதி காவல்நிலையத்தில் பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் போது, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார். இதனால், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியாக ஒதுக்கப்பட்டது.
பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு நிதி வழங்கிய எஸ்பி - undefined
பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரூ. 3 லட்சத்தை நிதியாக வழங்கினார்.
நிதியுதவி வழங்குதல்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை சாமுவேல் பாண்டிய ராஜனின் மனைவி தங்க மலர்மதியிடம் வழங்கினார். அப்போது, உடன் அவரது மகன்கள் இருந்தனர்.