திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் அமுதா. ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இவருக்கு கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக பரிசோதனை செய்து கொண்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மீண்டும் பணிக்கு திரும்பிய பெண் தலைமைக் காவலரை வரவேற்ற எஸ்பி! - திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார்
திருப்பத்தூர்: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய பெண் தலைமைக் காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பழக்கூடை கொடுத்து வரவேற்றார்.
Sp Vijayakumar Received Lady Police In Vaniyambadi
இதனால், கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, ஜூலை மாதம் 22ஆம் தேதி தலைமைக் காவலர் அமுதா குணமடைந்து அவரது வீட்டில் தனிமையில் இருந்தார்.
இந்நிலையில், மீண்டும் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று (ஆக.13) பணிக்கு திரும்பினார். அப்போது, பணிக்கு நகர காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அமுதாவிற்கு பழக்கூடை கொடுத்து வரவேற்றார்.