தமிழ்நாடு காவல்துறையின் தென் மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரிந்து வரும் காவலர்கள், காவல் அலுவலர்கள் தங்கள் பிறந்த நாளுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தென் மண்டல காவல்துறை ஐஜி முருகன் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
இந்த உத்தரவை அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கடைபிடிக்கும்படி, அவர் அறிவித்திருந்தார். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் காவலர்கள், காவல் அலுவலர்கள் தங்கள் பிறந்த நாளைக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட காவலருக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.