12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 8ஆவது லீக் போட்டி சவுதாம்டன் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுப்ளஸிஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஆம்லா, டி காக் ஆகியோரை பும்ரா தனது மிரட்டலான பந்துவீச்சில் அவுட் செய்தார்.
IND vs SA: இந்திய சுழலில் நிலைத்தடுமாறிய தென்னாப்பிரிக்கா! - உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்
சவுதாம்டன்: இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.
அவரைத் தொடர்ந்து, மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன்களை சேர்த்த டூஸன், அந்த அணியின் கேப்டன் டுப்ளஸிஸ் ஆகியோரை சாஹல், தனது சிறப்பான பந்துவீச்சன் மூலம் பேக் டூ பேக் பெவிலியனுக்கு திரும்பச் செய்தார். இதைத்தொடர்ந்து, குல்தீப் யாதவ் தன்னுடைய பங்கிற்கு டிமினியை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்ய, மீண்டும் சாஹல் டேவிட் மில்லர், பெலுக்வாயோ ஆகியோரை ஆவுட் செய்து மிரட்டினார்.
இதனால், 39.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்து ரன் குவிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி தடுமாறியது. இந்த தருணத்தில், ரபாடாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடிய கிறிஸ் மோரிஸ் 42 ரன்களில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, இம்ரான் தாஹிர் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்துள்ளது. ரபாடா 31 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் சாஹல் நான்கு, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.