2019ஆம் ஆண்டுக்கான சுலோவேனியா சர்வேதச பேட்மிண்டன் ஓபன் தொடர், அந்நாட்டின் மெட்வோடி நகரில் நடைபெற்றது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது.
பேட்மிண்டன்: சாம்பியனார் சவுரவ் வர்மா! - சுலோவேனியா
சுலோவேனியா சர்வதேச பேட்மிண்டன் ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை இந்திய வீரர் சவுரவ் வர்மா வென்றார்.
பேட்மிண்டன்: சவுரவ் வர்மா சாம்பியன்
இதில், இந்திய வீரர் சவுரவ் வர்மா, ஜப்பானின் மினோரு கோகாவை (Minoru Koga) எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சவுரவ் வர்மா 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சவுரவ் வர்மா கடந்த ஆண்டில் நெதர்லாந்து, ரஷியா ஓபன் தொடர்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.