தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் எம்.கே நகரை சேர்ந்தவர் முனியப்பன்(75). கூலி தொழிலாளியான இவருக்கு ஆறு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டதால் தற்பொழுது முனியப்பன் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
போதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் - Government hospital
தருமபுரி: பென்னாகரம் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
son who killed his father in Dharmapuri
இந்த நிலையில், ஜூலை 23 இரவு முனியப்பனிடம் அவரது நான்காவது மகன் வேலன்(45), குடிபோதையில் சண்டையிட்டதாக சொல்லப்படுகிறது. இதில் வேலன் தந்தை முனியப்பனை அடித்து கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து முனியப்பன் உறவினர்கள் பென்னாகரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தற்போது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.