ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் மீன்பிடித் தொழிலாளர் சந்திரன் (50). இவருக்கு சதீஸ் (21), இருளேஸ்வரன் (20) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு இரு மகன்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.
குடிபோதையில் தந்தையைக் கொன்றவர் கைது! - தந்தையை அடித்து கொலைசெய்த மகன்
ராமநாதபுரம்: எம்.ஆர்.டி. நகர் அருகே குடிபோதையில் தந்தையைக் கம்பியால் அடித்துக் கொலைசெய்த மகனை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதனை தாய் சாந்தி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மகன் சதீஸ் தாயை அடிக்க முற்பட்டுள்ளார். இதனைத் தடுக்காமல் இருந்த தந்தையை இருளேஸ்வரன் கேட்க இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருளேஸ்வரன், சந்திரனை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றார்.
அப்பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி கோயில் வாசல் முன் கீழே தள்ளிவிட்டு தலையில் இரும்பு கம்பி, உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலைசெய்தார். இது குறித்து தகவலறிந்த ராமேஸ்வரம் துறைமுக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருளேஸ்வரனை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.