கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஜே.கிருஷ்ணாபுரம் மன்றத் தலைவரான சரிதா பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை இருக்கையில் அமரக் கூடாது என்றும், ஊராட்சி மன்றத் தலைவர் என்ற அறிவிப்பு பலகை வைக்க கூடாது என்றும் அதிமுகவை சேர்ந்த உசிலமணி (எ) பாலசுப்பிரமணியம் கூறியதாக சரிதா கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும் பல்வேறு கட்சியினரும் தெரிவித்து வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.24) சமூக நீதிக் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "கோவை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பலரும் பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். கரோனா காலத்தில் 13க்கும் மேற்பட்டவர்கள் தீண்டாமை கொடுமைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.