நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள சித்தர்காட்டில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலேயே மிகப்பெரிய கருவாடு சந்தை இயங்கி வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஆலந்துறையப்பர் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கணக்கான கடைகளுடன் பிரமாண்டமாக இயங்கிய சந்தை, கரோனா பொது முடக்கத்தால் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. தற்போதைய ஊரடங்கு தளர்வு காரணமாக கருவாடு சந்தை ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 14) திறக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அதிகாலை முதலே சந்தையில் குவிந்து வருகின்றனர். எவ்வித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளும் செய்யப்படாத நிலையில், மக்கள் தகுந்த இடைவெளியை கடைபிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் கூட்டம் கூட்டமாக நின்று கருவாடு வாங்கிச் சென்றனர்.
ஏற்கனவே சென்னையில் இருந்து ஊர் திரும்பியவர்களால் மயிலாடுதுறையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நகரின் மையப்பகுதியில் தகுந்த இடைவெளியின்றி குவிந்தது மயிலாடுதுறை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கில் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன?