கரோனா தொற்றை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, உணவகங்கள் திறக்கப்படாத நிலையில், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர், மருத்துவமனைகளில் அனுமதிகப்பட்டிருக்கும் நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் என ஏராளமானோர் உணவின்றி தவித்தனர்.
உணவின்றி தவித்தவர்களின் பசியை போக்கிய சமூக ஆர்வலர் - சுகாதாரத்துறை அலுவலர்கள்
சென்னை: முழு ஊரடங்கால் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் உணவின்றி தவித்தவர்களின் பசியை போக்கியுள்ளார் சமூக ஆர்வலர் கார்திகேயன்.
இவர்களுக்கு உதவும் பொருட்டு மீன் பாடி வண்டியில் சாப்பாடு பொட்டலங்களுடன் களமிறங்கி பலரின் பசியை போக்கியுள்ளார் சமூக ஆர்வலர் கார்திகேயன்.
சென்னையில் மருத்துவமனைகளின் அருகில் உள்ள கடைகளை திறப்பதற்கு கூட சுகாதாரத்துறை அலுவலர்கள் அனுமதி மறுத்த நிலையில் கே.எம்.சி மருத்துவமனை, கோஷ் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட பகுகுதிகளில் உணவின்றி தவித்து வந்த நூற்றுக்கணக்கானோருக்கு தேவையான உணவுப் பொட்டலங்களை மீன் பாடி வண்டியில் சளைக்காமல் எடுத்துச் சென்று பசியை போக்கியுள்ளார் கர்த்திகேயன். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இவர்களுக்கு என் போன்ற சமூக ஆர்வலர்கள் உணவு வழங்கவில்லை என்றால் இன்றைய தினம் இவர்களுக்கு பட்டினியாகவே கழிந்திருக்கும்" என்கிறார்.