தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தோட்டத் தொழிலாளியைக் கடித்த விஷப்பாம்பு - Women labour biten by snake

கோவை: தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளியை விஷப்பாம்பு கடித்ததையடுத்து, சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளியை கடித்த விஷப் பாம்பு!
தோட்டத் தொழிலாளியை கடித்த விஷப் பாம்பு!

By

Published : Jun 15, 2020, 12:51 PM IST

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சேக்கல் முடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சி அம்மாள் (49). இவர் அப்பகுதியில் உள்ள இரண்டாம் நம்பர் காட்டில் தேயிலை பறித்துக் கொண்டிருக்கும்போது தேயிலைச் செடிக்குள் ஒளிந்திருந்த சட்டி தலை ரகத்தைச் சேர்ந்த விஷப்பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து, தன்னை பாம்பு கடித்ததாக, அக்கம் பக்கத்தில் உள்ள சக தொழிலாளிகள் இடமும் கண்காணிப்பாளர் இடமும் நாச்சி அம்மாள் தெரிவித்துள்ளார். உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு 108 வாகனம் மூலமாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வால்பாறை பகுதியில் இதுபோன்ற விஷத்தன்மையுள்ள விஷப் பூச்சிகள், பாம்புகள் அதிகமாகக் காணப்படுவதாகவும், இதனால் உயிரிழக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details