திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று 1356 பேர் பாதிக்கப்பட்டு 873 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 459 பேர் திருப்பத்தூர், வாணியம்பாடி ,ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆம்பூரில் ஆறு கடைகளுக்கு சீல்! - தகுந்த இடைவெளி
திருப்பத்தூர்: ஆம்பூரில் முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காத ஆறு கடைகளுக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதனால், கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையிலான பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்பூர் பஜார், உமர்ரோடு, கிருஷ்ணாபுரம், ஓ.ஏ.ஆர் திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தளர்வு நேரம் முடிந்ததும், முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காத டிவி ஷோரூம், எலக்ட்ரிக்கல், டீ க்கடை உள்ளிட்ட 6 கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வட்டாட்சியர் பத்மநாபன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.