அனிருத் நாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கத் தயாராக இருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
'அனிருத் முதல் படத்தை நான்தான் தயாரிப்பேன்' - சிவகார்த்திகேயன் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
அனிருத் நாயகனாக நடித்தால் அவரது முதல் படத்தை நான்தான் தயாரிப்பேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் அவரோ தனக்கு படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று பலமுறை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ராக்ஸ்டார் அனிருத் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். அதைக்கண்ட சிவகார்த்திகேயன், "சார்.. எப்போனாலும் சரி, என்னைக்குன்னாலும் சரி. நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத்தை நான் தயாரிப்பேன். நன்றி சார்" என்று பதிவிட்டுள்ளார்.