நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் மாணவர் தற்கொலை தொடர்வதை தடுத்திட வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணியாக வந்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்வதை நினைவுபடுத்தும்விதமாக கையில் சூலம் ஏந்தி, சூலத்தில் ஸ்டெதஸ்கோப் வைத்து மாணவர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.