வட சென்னை பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனாவை விரைவில் குணப்படுத்தும் சித்த மருத்துவம் - siddha medicine
சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொண்ட 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிப்பதால் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று சித்த மருத்துவர்கள் கூறி வருகின்றனர். கடந்த ஐந்தாம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வியாசர்பாடியில் உள்ள சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முதல் முறையாக எட்டு நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதற்கு அடுத்தபடியாக தொற்று பாதிக்கப்பட்டு சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொண்ட 42 நபர்கள் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை மருத்துவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.