தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்! - chennai corona related news

சென்னை: தாம்பரம் சரகத்தில் தெற்கு மண்டல கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ஐ.ஜி. அன்பு வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில், கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
சென்னையில், கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

By

Published : Jun 20, 2020, 5:12 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை தாம்பரம் சரகத்திற்கு உள்பட்ட தாம்பரம், கன்னட பாளையம், சண்முகம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு குறித்தும், அதனை தடுக்கும் விதமாகவும், வீடு வீடாக சென்று கரோனா சோதனை செய்யப்படுகிறது. நடமாடும் வாகனம் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று கரோனா தடுப்பு மருத்துகளும் வழங்கப்படு வருகிறது.

இந்நிலையில், தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு வருவதால் தாம்பரம் நகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புக் குழு சார்பில் இலவச சிறப்பு முகாம் நடத்தபட்டது.

இதில் 100க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் தாங்களாகவே பரிசோதனை செய்துகொண்டனர். இதனை சென்னை தெற்கு மண்டல கரோனா தடுப்பு அலுவலர் ஐ.ஜி.அன்பு, ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதியில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, அதிக காய்ச்சல் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்ட்டு அவர்களின் முகவரியை மருத்துவர்கள் குறித்து வைத்தனர். மேலும் பரிசோதனை செய்த அனைவருக்கும் இலவசமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details