இது தொடர்பாக சேவாபாரதி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் கணேஷ் காந்தி என்பவர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் தொடர்புடைய காவலர்கள் அனைவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தொடர்பு உள்ளது எனக் கூறி தடையும் செய்துள்ளனர். இந்த நிலையில் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் தமிழ்நாடு முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பதாக கருத்துகளை தெரிவித்துள்ளனர்.