கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஓன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் விட்டாலியாவை எதிர்கொண்டார்.
டென்னிஸ்: 800 வெற்றிகளை பதிவு செய்து டென்னிஸின் லேடி சூப்பர்ஸ்டார் ஆனார் செரீனா வில்லியம்ஸ்! - செரீனா வில்லியம்ஸ்
பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது 800ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் பறிகொடுத்த செரீனா, இரண்டாவது செட்டை 6-1 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செரீனா, 6-1 என்ற கணக்கில் விட்டாலியாவை வீழ்த்தினார்.
இதன் மூலம், செரீனா 2-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 37 வயதான இவர் டென்னிஸ் போட்டியில் வெற்றிபெறும் 800ஆவது வெற்றி இதுவாகும். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவுள்ள இரண்டாம் சுற்றுப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ், ஜப்பான் வீராங்கனை குருமி நாராவை எதிர்கொள்ள உள்ளார்.