தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இந்திய பங்குச்சந்தைகள் மூன்றே நாள்களில் 2,000 புள்ளிகள் சரிவு - வியப்பை தராத வியாழன்

இந்திய பங்குச்சந்தைகள் மூன்றே நாள்களில் கிட்டத்தட்ட 2000 புள்ளிகளை இழந்து தவிக்கிறது.

இந்திய பங்குச்சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகள்

By

Published : Jan 20, 2022, 6:56 PM IST

Updated : Jan 21, 2022, 1:50 PM IST

பங்கு முதலீட்டாளர்களை கடந்த மூன்று தினங்களாக பாடாய் படுத்துகிறது இந்திய பங்குச்சந்தைகள். தொடர்ந்து இறங்கு முகத்தில் சென்று கொண்டே இருக்கிறது. மூன்றே நாள்களில் கிட்டத்தட்ட 2,000 புள்ளிகளை இழந்து தவிக்கிறது.

இதற்கு, ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்படும் தொடர் சரிவு, பாண்ட் ஈல்டு, ஒமைக்ரான் மிரட்டல், வரவிருக்கிறது பட்ஜெட் இப்படி நிறைய காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 634 புள்ளிகள் குறைந்தும், நிஃப்டி 181 புள்ளிகள் குறைந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளையும் நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளையும் தக்க வைக்க தவறிவிட்டது.

பவர்கிரிட் கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், கிராசிம், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இன்றைக்கு சிறிதே லாபம் கொடுத்த பங்குகள் என்று சொல்லலாம். பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வரும் வரை இப்படி ஊசலாட்டம் இருக்கத்தான் செய்யும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவிட் கால கடன் சலுகைக்கு ரூ.973 கோடி ஒப்புதல் - மத்திய அமைச்சரவை

Last Updated : Jan 21, 2022, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details