அனைத்து ஓபிசி, சீர்மரபின சமூக மக்கள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்டக்காரர்கள் கூறுகையில், "கடந்த 90 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவையும் சேர்த்து கணக்கெடுப்பு நடக்காததால் 80 கோடி ஓபிசி மக்களுக்கு கல்வி, வேவை வாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களில் உரிய பங்கு கிடைக்கவில்லை.
எனவே, வரும் 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவையும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய கல்வி நிறுவனச் சட்டம் 2006-ஐ திருத்தி எல்லா கல்வி நிறுவனத்திலும் ஓபிசிக்கு இட ஒதுக்கீடும், மாநிலங்களில் மாநில இட ஒதுக்கீடு விகிதப்படி இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்திட வேண்டும்.