திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு பகுதியிலிருந்து அனுமதியின்றி கொம்மேஷ்வரம் வழியாக மொரம்பு மண் கடத்தி வருவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் இன்று அதிகாலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அனுமதியின்றி மண் கடத்திய திமுக பிரமுகரின் டிராக்டர் பறிமுதல் - Tractor seized
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அனுமதியின்றி மொரம்பு மண் கடத்திய திமுக பிரமுகருக்குச் சொந்தமான டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மண் கடத்திய திமுக பிரமுகரின் டிராக்டர் பறிமுதல்
அப்போது நரியம்பட்டிலிருந்து கொம்மேஸ்வரம் வழியாக மொரம்பு மண் ஏற்றிவந்த டிராக்டரை மடக்கியபோது, ஓட்டுநர் ராமு தப்பியோடியுள்ளார். இதையடுத்து டிராக்டரைப் பறிமுதல் செய்த வட்டாட்சியர், விசாரணை மேற்கொண்டதில் அந்த டிராக்டர் கண்ணிகாபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சுதாகர் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.