7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பணி இன்று நடைபெற்றுவருகிறது. இதில், பாஜக கூட்டணி கட்சிகளுடன் 344 மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. இதனால், பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் சூழல்நிலவியுள்ளது.
மோடியின் இரண்டாவது இன்னிங்ஸ் இன்னும் சிறப்பாக இருக்கும்- சேவாக் நம்பிக்கை - ELections 2019
மக்களவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் வெற்றிக்குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் டுவீட் செய்துள்ளார்."உலகின் மிகப்பெறிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள பொதுமக்கள் தங்களது முடிவை தெரிவித்துள்ளார்கள். இந்தத் தேர்தலில் இமாலய வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். பிரதமராக உங்களது இரண்டாவது இன்னிங்ஸில் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று சாதனைப் புரியம்" என பதிவிட்டார்.