சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட நீட்டிப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டம், முதற்கட்டமாக கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் வரை அமைக்கப்படுகிறது. முன்னதாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் முதற்கட்டமாக ரயில் பாதை தொடங்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் வரையிலான 8 கிலோ மீட்டர் பாதையில் சாலிகிராமம், ஆவிச்சி பள்ளி, ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் சந்திப்பு, போரூர் சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்கள் வழியில் வருகிறது.
இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதில் குறைந்தபட்டச தொகையை தெரிவித்திருத்திருந்த லார்சன் அண்ட் டியூபுரோ நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் அலுவளர்கள் கூறுகின்றனர்.