கோவையில் 300க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் அனைவருக்கும் கடந்த மார்ச் மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆன நிலையில் கோவையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக மாநகராட்சி அலுவலகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.