லாஸ் ஏஞ்சல்ஸ்:கரோனா நோய்க் கிருமியானது, அத்தொற்று இல்லாத உயிரணுக்களில் புரதங்களை கடத்தி நோய்த்தொற்றின் வீரியத்தை கூட்டுவதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல மருந்துகளையும் கரோனாவுக்கு எதிராக பயன்படுத்தலாம் என அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த கரோனா நோய்க் கிருமியானது, நோய்க் தொற்றுக்குள்ளான மனிதனின் மூலக்கூறுகளை சிதைத்து, அதனில் உள்ள நல்ல புரதங்களை அழிக்கும் வல்லமைக் கொண்டது. இப்படி அழிக்கப்படும் புரதங்களால், நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து வலுவிழந்து மரணிக்கின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த, நல்ல புரதங்களை பாதுகாக்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரைத்துள்ள சில மருந்துகள் பயன்படுத்தலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.