தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சூரிய கிரகணத்தைக் காண அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு! - சூரிய கிரகணம்

சேலம்: வானில் சூரியனை, சந்திரன் மறைக்கும் இந்த அரிய நிகழ்வை காண்பதற்காக சேலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Science moment make Special motion to view solar eclipse
சூரியகிறக்கத்தைக் காண அறிவியல் இயக்கக்த்தினர் சிறப்பு ஏற்பாடுகள்

By

Published : Jun 21, 2020, 6:44 PM IST

Updated : Jun 22, 2020, 3:03 AM IST

சேலம் அடுத்த இரும்பாலை அருகே உள்ள மாரமங்களத்துபட்டி குடியிருப்பு பகுதியில் தொலைநோக்குக் கருவிகள், சூரிய ஒளியை வடிகட்டும் கண்ணாடிகளை கொண்டு இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்களுக்கு அறிவியல் இயக்கத்தினர் காண்பித்தனர்.

அப்போது இந்த கிரகணத்தின் தன்மை, சிறப்புகளை பொதுமக்களுக்கு அறிவியல் இயக்கத்தினர் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த கிரகணத்தின்போது சூரியனை சுற்றி கரோனா ஸ்பியர் என்ற வளையம் தோன்றும்.

இதற்கும் கரோனா நோய் தொற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த கருத்தாளர்கள், வட இந்திய மாநிலங்களில் வளைய கிரகணமாகவும், தமிழ்நாட்டில் மெல்லிய வளைய சூரிய கிரகணமாக தெரியும் என்று கூறினர்.

இந்த சூரிய கிரகணத்தை சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடி அல்லது கிரகணத்தின் நிழல் பிம்பத்தை கொண்டுதான் பார்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இந்நிகழ்வில் வானவியல் அறிஞர் ஜெயமுருகன் உள்ளிட்ட அறிவியல் இயக்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Last Updated : Jun 22, 2020, 3:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details