அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கு வராமல் இருந்திருந்தால், அவர்கள் தேர்வுக்கு வரவில்லை எனப் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களைத் தொடர்ந்து குழப்பத்திற்கு உள்ளாக்கும் பள்ளிக்கல்வித்துறை! - school education department
சென்னை: காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கு வராத 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களைத் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என (Absent) பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 விழுக்காட்டு மதிப்பெண்களும், பொது அறிவு பாடத்திற்காக 20 விழுக்காட்டு மதிப்பெண்களும் வழங்கி முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகவே கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கு வராத 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களைத் தேர்வில் கலந்துகொள்ளவில்லை என (Absent) பதிவு செய்ய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.