காமராஜர் திருவுருவப் படத்தை அலங்கரித்து ஜூலை 15ஆம் தேதி அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் கொண்டாட வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியினை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .
காமராஜர் பிறந்தநாளை கல்வி அலுவலகங்களில் கொண்டாட வேண்டும் - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - Corona infection
சென்னை: காமராஜர் திருவுருவப் படத்தை அலங்கரித்து ஜூலை 15ஆம் தேதி அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
![காமராஜர் பிறந்தநாளை கல்வி அலுவலகங்களில் கொண்டாட வேண்டும் - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை Kamarajar birthday celebration](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:13:01:1594204981-tn-che-07-tnschoolofeducation-7209106-08072020155900-0807f-1594204140-937.jpeg)
Kamarajar birthday celebration
தற்போது கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தினால் ஜூலை 15ஆம் தேதி அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்கள் , மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்களில் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.