தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கீழையூர் மூரியர் தெருவை சேர்ந்தவர்கள் கலைச்செல்வன் (எ) வெங்கடேசன், ரேவதி தம்பதி. இவர்களுடைய மகன் ஹரிஷ் (7). இவர், ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று ஹரிஷ் வீட்டிலிருந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது கண்ணந்தங்குடி யில் இருந்து ஒரத்தநாடு நோக்கி சென்ற மினிவேன் ஹரிஷ் மீது மோதியது.