தேனி மாவட்டம், தம்மிநாயக்கன்பட்டியில் உள்ளது, இந்திரா காலனி. அப்பகுதியைச் சேர்ந்த 25 ஆதி திராவிட குடும்பங்களுக்குக் கடந்த 1989ஆம் ஆண்டு அரசால் கான்கிரீட் போட்ட தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன.
தொடர்ந்து 30 ஆண்டுகள் பழமையான இந்தத் தொகுப்பு வீடுகள் நாளடைவில், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு கட்டடங்கள் பழுதடைந்து காணப்பட்டன. இந்நிலையில், இந்திரா காலனியைச் சேர்ந்த லிங்கமுத்து, கருப்பாயி தம்பதியின் வீட்டின் கான்கிரீட் மேல்தளம் நேற்று(ஜூலை 8) மாலை இடிந்து விழுந்து தரை மட்டமாகின.
இதில், வீட்டில் இருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லிங்கமுத்து குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.