உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு, கரோனா தொற்றுக்கு மத்தியில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள விசாரணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பொதுவான வழிமுறைகளை நீதிமன்றம் வழங்க முடியாது என்று கூறியுள்ளது.
விசாரணைக் கைதிகளை விடுவிக்க சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள் - உச்ச நீதிமன்றம் - bail for trail prisoners
டெல்லி: விசாரணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பொது உத்தரவுகளை வழங்க மறுத்து, அது அந்தந்த அதிகார வரம்பிற்குட்பட்ட உயர் நீதிமன்றங்களால் பரிசீலிக்கப்பட வேண்டிய பிரச்னை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
![விசாரணைக் கைதிகளை விடுவிக்க சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள் - உச்ச நீதிமன்றம் prisoners](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:15-7486620-j.jpg)
prisoners
இது தொடர்பாக மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனிடம் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஒரு உயர்மட்டக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.